அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/அகஇ/2014, நாள். .08.2014ன் படி 2014-15ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல்
"Education is what remains after one has forgotten everything he learned in school."
Saturday, August 30, 2014
அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் - வலுவூட்டல்" குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி 06.09.2014
அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/அகஇ/2014, நாள். .08.2014ன் படி 2014-15ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல்
Wednesday, August 27, 2014
Saturday, August 23, 2014
சான்றிதழ் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி?
ஒருவருடைய பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப்பள்ளி மதிப்பெண் சான்றிதழ் எதிர்பாராத வகையில் தொலைந்துவிட்டால் அல்லது தீவிபத்து, வெள்ளம், கரையான் போன்றவற்றால் சிதிலமாகி இழக்க நேரிட்டால் அதன் நகலை பெற முடியும். அதற்கான நடைமுறை வழிகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Thursday, August 21, 2014
தமிழகத்தை சேர்ந்த 22 ஆசிரியர்களுக்கு தேசிய விருது : மத்திய அரசு அறிவிப்பு
தமிழகத்தைச் சேர்ந்த, 22 ஆசிரியர்களுக்கு, தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு, செப்., 5ம் தேதி, டில்லி, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி விருது வழங்க உள்ளார். சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, அந்தந்த மாநில அரசுகளும், தேசிய அளவில், மத்திய அரசும், ஆண்டுதோறும், விருது வழங்கி கவுரவிக்கின்றன.
Wednesday, August 20, 2014
மன உளைச்சலால் ஆசிரியர் பயிற்றுநர் மயக்கம்: முதன்மைக் கல்வி அலுவலர் மீது `உங்கள் குரலில்' புகார்-Hindu Tamil
மன உளைச்சலால் ஆசிரியர் பயிற்றுநர் மயக்கம்: முதன்மைக் கல்வி அலுவலர் மீது `உங்கள் குரலில்' புகார்-Hindu Tamil
2 மாதங்களுக்கு ஒரு முறை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் சரிபார்ப்பு.
ஆசிரியர்களின் பணிப் பதிவேடுகளை 2 மாதங்களுக்கு ஒரு முறை சரிபார்த்து உறுதி செய்ய தொடக்க கல்வித் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
Sunday, August 17, 2014
கூடுதல் மதிப்பெண் பெற மாணவர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி
தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில், அதிக மதிப்பெண் பெறுபவர்களின் பட்டியலை தயாரித்து, அவர்கள், அரசு விருது பெறும் மாணவர்களாக மாறும் அளவுக்கு சிறப்பு பயிற்சியளிக்க, பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
Saturday, August 16, 2014
வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சி !
வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சியை நேரடி அனுபவம் மூலம் மாணவர்கள் அறிந்துகொள்ளும் செயல்பாடு இது. முட்டைப் பருவம், லார்வா பருவம் கூட்டுப்புழுப் பருவம், வண்ணத்துப்பூச்சிப் பருவம் என ஒவ்வொரு பருவ நிலையிலும் உள்ள மாதிரிகளைச் சேகரித்து வரச்செய்து, கண்ணாடிப் பாட்டில்களில் காட்சிப்படுத்தலாம்.
மாணவ, மாணவிகளுக்கு புதுகையில் செஸ் போட்டி 17ம் தேதி நடக்கிறது
புதுக்கோட்டை, : சதுரங்க கழகம் சார்பில் மாவட்ட அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு செஸ் போட்டி வரும் 17ம் தேதி புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அலுவலர் மன்றத்தில் நடக்கிறது.
காட்டுக்குள்ளே போகலாம்... கதைகளைக் கேட்கலாம் !
சே.சின்னத்துரை பா.காளிமுத்து
அந்தப் பள்ளிக்குள் சிங்கத்தின் கர்ஜனை, யானையின் பிளிறல், நரியின் ஊளை எனப் பல்வேறு சத்தங்கள் வந்தன. 'ஸ்கூலுக்குள்ளே ஜூ வந்துடுச்சா என்ன?’ என்ற தயக்கத்தோடு நுழைந்தால், விலங்குகள் மற்றும் காட்டுவாசிகள் வேடங்களில் மாணவர்கள் உலாவிக்கொண்டிருந்தார்கள். சிலருக்கு அப்போதுதான் பரபர மேக்கப் நடந்துகொண்டிருந்தது.
மாணவர்களுக்கு முகத்தில் மேக்கப் போட்டு, காட்டுவாசிகளாகவும் விலங்குகளாகவும்
சென்னையில் மூடப்படும் நிலைக்கு வந்துள்ள 8 மாநகராட்சி பள்ளிகள்
மாணவர் சேர்க்கை குறைவால், சென்னையில் எட்டு மாநகராட்சி பள்ளிகள் மூடப்படும் நிலைக்கு வந்துள்ளன. இந்த பள்ளிகளை தனியார் மூலம் பராமரிக்க திட்டமிடப்பட்ட நிலையில், அதிலும் தற்போது குழப்பம் நிலவுவதாக தெரிகிறது.
முதன்மை கல்வி அதிகாரியிடம் அடையாள அட்டை கேட்ட தலைமையாசிரியர் இடைநீக்கம்.
அரசுப் பள்ளிக்குச் சென்ற மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் அடையாள அட்டை கேட்டது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
கலவை சாதத்துடன் மசாலா முட்டை : சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவிப்பு.
சென்னை: ''தமிழகத்தில் உள்ள, அனைத்து சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு, பல வகை கலவை சாதத்துடன், மசாலா சேர்த்த முட்டை வழங்கும் திட்டம்நீட்டிக்கப்படும்,'' என, சுதந்திர தின விழாவில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
மொழியுணர்வை வளர்ப்போம்.
"மொழி" மனித இனத்திற்கு மட்டுமே உரித்தான, பல்வேறு பரிணாமங்களைக் கொண்ட, பல்வேறு வேறுபாடுகளைக் கொண்ட, அவ்வபோது மாற்றத்திற்கு உட்படும் மனித உணர்வுகளை,உணர்ச்சிகளை,சிந்தனையை வெளிப்படுத்தும் ஒரு கருவி.
Monday, August 11, 2014
பொதுத்தேர்வுகளை காரணம் காட்டி மாணவர்களின் விளையாட்டு வாய்ப்புகளை தடுக்ககூடாது
பள்ளி கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களுக்கு ஒரு அறிக்கையை அனுப்பி உள்ளார். அந்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப போட்டிகளை நடத்த வேண்டும். வரும் அக்டோபர் 28ம் தேதி விளையாட்டு தினவிழாவை நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்க வேண்டும். சர்வதேச அளவில் விளையாட்டில் பதக்கம் பெறும் திறமை வாய்ந்தவர்களை கண்டறியும் நோக்கத்துடன் இளம்வயது சிறுவர், சிறுமியர் உடல்திறனை கண்டறிந்திட அவர்களை உரிய முறையில் தேர்வு செய்ய வேண்டும். ஆகஸ்ட் 2ம் வாரத்திற்குள் உடல் திறன் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும்.
கற்றல் அடைவுத் திறனை மேம்படுத்த மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வு
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளின் கற்றல் அடைவுத் திறனை மேம்படுத்தும் பொருட்டு, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தேர்வு நடத்தப்படுகிறது.
தொழில் வகைகள்!
மனிதர்கள், வள ஆதாரங்களைச் சார்ந்த தொழில்களால், பொருளாதாரப் பயனை அடைகின்றனர். இந்தத் தொழில்களை, பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
முதல் நிலைத் தொழில்கள்: மீன் பிடித்தல், மரம் வெட்டுதல் போல, இயற்கை வள ஆதாரங்களோடு, நேரடியாக இணைந்து செயல்படுபவர்கள், சிவப்புக் கழுத்துப்பட்டை பணியாளர்கள் (Red Collar workers).
இரண்டாம் நிலைத் தொழில்கள்: சர்க்கரை உற்பத்தி செய்தல் போல, மூலப் பொருள்களைக்கொண்டு வேறொரு பொருளை உற்பத்தி செய்பவர்கள், நீலக் கழுத்துப்பட்டை பணியாளர்கள்(Blue Collar workers).
மூன்றாம் நிலைத் தொழில்கள்: போக்குவரத்து, தகவல் தொடர்பு, வங்கிப் பணியாளர்கள், மூன்றாம் நிலைத் தொழில்களில் ஈடுபடுபவர்கள். இவர்கள், வெளிர் சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் (Pink Collar workers).
.
.
நான்காம் நிலைத் தொழில்கள்: கல்வித்துறை, நீதித்துறை, மருத்துவம், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆகிய தனித்தன்மைகொண்ட சூழல்களில் சேவை புரிவோர், வெள்ளைக் கழுத்துப் பட்டை பணியாளர்கள் (White Collar workers)
ஐந்தாம் நிலைத் தொழில்கள்: அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள தீர்மானிக்கும் திறன்கொண்ட அறிவுரை வழங்குவோர், தங்கக் கழுத்துப் பட்டை பணியாளர்கள் (Gold Collar workers).மாணவர்களிடம் பாடத்தை விளக்கிவிட்டு, தொழில் சார்ந்தவர்களைப் போல நடிக்கச்செய்து, அது எந்த வகைத் தொழிலைச் சார்ந்தது என மற்ற மாணவர்களைக் கூறச் செய்யலாம்.
- கே.ஆர்.செல்வமீனாள்,
சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை.
சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை.
பயிர்நோய் வகைகள் அறிவோம்!
மனிதர்களுக்கு நோய் உண்டாகி, உடலைப் பாதிப்பது போலவே, தாவரங்களையும் நோய்கள் தாக்குகின்றன.அதனால், பொருளாதாரரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. பாக்டீரியா, பூஞ்சைகள், வைரஸ் போன்ற நுண்ணுயிரிகளால் தாவரங்களில் தோன்றும் பலவித நோய்கள் குறித்து வேளாண்மைத் துறை அலுவலர் ஒருவரை பள்ளிக்கு வரவழைத்து, மாணவர்கள் ஆர்வத்துடன் சேகரித்த தகவல்கள் இவை.
Wednesday, August 6, 2014
Tuesday, August 5, 2014
Friday, August 1, 2014
எஸ்.எஸ்.ஏ., மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டங்களுக்காக மத்திய அரசு 2400 கோடி ஒதுக்கீடு !!!!
தமிழகத்தில், எஸ்.எஸ்.ஏ., (அனைவருக்கும் கல்வி திட்டம்), ஆர்.எம்.எஸ்.ஏ.,(அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்) திட்டங்களுக்காக, நடப்பாண்டில், 2,400 கோடியை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. திட்டங்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் ஆகியவற்றுக்கான பெரும் அளவு நிதியை, மத்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும் வழங்குகிறது.நடப்பு (2014 - 15) கல்வியாண்டில், எஸ்.எஸ்.ஏ., மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டங்களுக்கு தேவைப்படும் நிதி குறித்த அறிக்கையை, பல மாதங்களுக்கு முன், தமிழக அதிகாரிகள், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் வழங்கி இருந்தனர்.
Subscribe to:
Posts (Atom)