Wednesday, August 20, 2014

அனைவருக்கும் கல்வி இயக்கம் - வட்டார வளமையம் –திருமயம் கிராமசபா கூட்டத்தில் ஆசிரியர் பயிற்றுநர்கள்


LEMBALAKKUDI
LEMBALAKKUDI





சீமானுர் 
திருமயம் வட்டார வளமையத்திற்குட்பட்ட 33 பஞ்சாயத்துக்களிலும் 15.08.2014 அன்று 68 வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கிராமசபா கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வட்டார வளமைய மேற்பார்வையாளர், உதவி தொடக்க கல்வி அலுவலர், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

திருமயம் பஞ்சாயத்துக்குட்பட்ட சீமானுர் குடியிருப்பு பகுதியில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது. கிராமசபா கூட்டத்தில் அனவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் சிரியர் பயிற்றுனர்கள் ம.கல்யாணி, அ.குல்ஜார்பானு, சிறப்பாசிரியர்கள் இரா. பிரான்ஸ் ரிட்ஸ் சோபியா, த..பேபி மற்றும் அ. ஜுலியட் நிர்மலா மேரி ஆகியோர் கலந்துக்கொண்டு பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி “ பள்ளிசெல்லா குழந்தைகள் இல்லாத கிராமம்” என்ற நிலையினை ஏற்படுத்த உறுதி எடுத்துக்கோண்டனர்.

லெம்பலக்குடி பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பாக ஆசிரியர் பயிற்றுனர் ப. சின்னையா கலந்து கொண்டு பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி “ பள்ளிசெல்லா குழந்தைகள் இல்லாத கிராமம்” என்ற நிலையினை ஏற்படுத்த உறுதிமொழி எடுத்துக்கோண்டனர். பி. அழகாபுரி பகுதியில் ஆசிரியர் பயிற்றுனர்கள் க.செந்தில்குமார் மற்றும் ச.இராமநாதன் நெய்வாசல் பஞ்சாயத்தில் ஆசிரியர் பயிற்றுனர்கள் ப. பிரகதாம்பாள் , ச.விஜயசாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் 22.08.2014 அன்று திருமயம் அரசினர் மகளிர் மேல் நிலைப்பள்ளியில் நடைபெறும் மருத்துவ முகாமில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளை தவறாமல் முகாமில் கலந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டது. அனைத்து மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெறும் இடம் மற்றும் மருத்துவ உதவிகள் குறித்தும் விளக்கப்பட்டது.

No comments:

BRTES PUDUGAI