Monday, August 11, 2014

DESIGN FOR CHANGE


மாற்றத்தை ஏற்படுத்திய மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள்

கோவை மாவட்டம் ,காரமடை ஒன்றியம், மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாலை நேரத்தில் பள்ளி விடும் போது, மாணவர்கள் கட்டுப்பாடின்றி ஓடி, சிறுசிறு விபத்துகளில் மாட்டிக் கொள்வது ஒரு நீண்டகால பிரச்சினையாகவே இருந்து வந்தது.
இதை எப்படி மாற்றுவது என மாணவர்கள் யோசித்ததன் விளைவு... உருவானது மாணவர்களே அமைத்த  சாலை பாதுகாப்பு படை.
 13 மாணவர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட இந்த அமைப்பானது தினமும் மாணவர்களை கண்காணித்து மாணவர்கள் வரிசையாய் செல்ல வழிகாட்டுகிறது.  இதனால் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது.





மாணவர்களின் இந்த சேவை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.இது பற்றி பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர் திரு.ரங்கராஜ் பேசும் போது, "சிறு வயதிலேயே மாணவர்களிடையே தோன்றிய  இந்த பொறுப்புணர்வு  அவர்களின் எதிர்கால சமுதாய மாற்றத்திற்கு ஒரு படிக்கல்லாக அமையும்"  எனக் கூறினார்.

 மாணவர்களால் ஏற்படுத்தப்பட்ட இந்த மாற்றமானது DESIGN FOR CHANGE   என்ற செயல்திட்ட போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

BRTES PUDUGAI