Monday, August 11, 2014

தொழில் வகைகள்!

மனிதர்கள், வள ஆதாரங்களைச் சார்ந்த தொழில்களால், பொருளாதாரப் பயனை அடைகின்றனர். இந்தத் தொழில்களை, பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
முதல் நிலைத் தொழில்கள்: மீன் பிடித்தல், மரம் வெட்டுதல் போல, இயற்கை வள ஆதாரங்களோடு, நேரடியாக இணைந்து செயல்படுபவர்கள், சிவப்புக் கழுத்துப்பட்டை பணியாளர்கள் (Red Collar workers).
இரண்டாம் நிலைத் தொழில்கள்: சர்க்கரை உற்பத்தி செய்தல் போல, மூலப் பொருள்களைக்கொண்டு வேறொரு பொருளை உற்பத்தி செய்பவர்கள், நீலக் கழுத்துப்பட்டை பணியாளர்கள்(Blue Collar workers).
 
மூன்றாம் நிலைத் தொழில்கள்: போக்குவரத்து, தகவல் தொடர்பு, வங்கிப் பணியாளர்கள், மூன்றாம் நிலைத் தொழில்களில் ஈடுபடுபவர்கள். இவர்கள், வெளிர் சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் (Pink Collar workers).
.
நான்காம் நிலைத் தொழில்கள்: கல்வித்துறை, நீதித்துறை, மருத்துவம், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆகிய தனித்தன்மைகொண்ட சூழல்களில் சேவை புரிவோர், வெள்ளைக் கழுத்துப் பட்டை பணியாளர்கள் (White Collar workers)
ஐந்தாம் நிலைத் தொழில்கள்: அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள தீர்மானிக்கும் திறன்கொண்ட அறிவுரை வழங்குவோர், தங்கக் கழுத்துப் பட்டை பணியாளர்கள்  (Gold Collar workers).மாணவர்களிடம் பாடத்தை விளக்கிவிட்டு, தொழில் சார்ந்தவர்களைப் போல நடிக்கச்செய்து, அது எந்த வகைத் தொழிலைச் சார்ந்தது என மற்ற மாணவர்களைக் கூறச் செய்யலாம்.

- கே.ஆர்.செல்வமீனாள்,
சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை.

No comments:

BRTES PUDUGAI