BRC THIRUMAYAM
வகுப்பு மாணவர்களைப் பல குழுக்களாகப் பிரித்துக்கொள்ளவும். ஓவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைப்பைக் கொடுத்து, ஆசிரியர் உதவியுடன் அந்தத் தலைப்பு தொடர்பான படங்களைச் சேகரிக்கச் சொல்லவும். உதாரணமாக, ஓரு குழுவுக்கு விலங்குகளின் படங்கள், அதன் பெயர்கள், அவை வாழும் இடங்கள் பற்றி சேகரிக்கச் சொல்லவும். மற்றொரு குழு, பறவைகளின் படங்கள், அவற்றின் கூடுகள், மற்றும் இரை பற்றிய தகவல்களைச் சேகரிக்க வேண்டும். இறுதியாக, அனைத்துக் குழுக்களும் சேகரித்த படங்களை கண்காட்சியாக வைத்து, தங்கள் குழு சேகரித்தவற்றைப் பற்றி மற்ற மாணவர்களுக்கு விளக்க வேண்டும். இதன் மூலம் விலங்குகள், பறவைகளின் பெயர்கள், உணவு, வாழிடங்கள் மற்றும் சிறப்புகள் பற்றி அனைவரும் அறிந்துகொள்வார்கள்.
No comments:
Post a Comment