உறவின் முறை அறிவோம்! எஃப்.ஏ. மதிப்பீட்டுக்கு உரிய 16 பக்கங்கள் தவிர, இதழில் ஆங்காங்கே எஃப்.ஏ. 'லோகோ’ இடம்பெற்று உள்ளது. அந்தப் பகுதிகளையும் உங்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் பயன்படுத்திக்கொள்ளலாம். செய்தித்தாளில் வருகின்ற தாத்தா, பாட்டி உருவங்களை வெட்டி எடுத்து,கனமான அட்டையில் ஒட்டி, பெரிய குச்சி கொண்டு அந்தப் படங்களைச் செருக வேண்டும்.
பின்னர், ஒவ்வொரு மாணவரிடமும் ஒவ்வோர்உருவ அட்டையைக் கொடுக்க வேண்டும்.அந்தப் படங்களை வைத்து மாணவர்களிடையே உரையாடல்களை நடத்தலாம். (எ.கா) மாணவன்: ''உன்னை யார் பள்ளிக்குக் கொண்டுவந்து விட்டார்கள்?'' மாணவி: ''நான் பாட்டியுடன் வந்தேன்.'' (பாட்டி படம் இருக்கும் அட்டையைக் காட்டுதல்). மாணவன்: ''என்னை தாத்தா அழைத்துவந்தார்.'' (தாத்தா படம் காட்டுதல்) இதன் மூலம் மாணவர்கள், 'என் குடும்பம்’ என்ற பாடத்தை செயல்வழி மூலம் தெளிவாக அறிந்துகொள்வர்.
No comments:
Post a Comment