நேரத்தின் அவசியம் அறிதல்! நேரம் பார்க்க அறிந்துகொள்வது, மிகவும் முக்கியமானது. இதை, மாணவர்களை ஒரு செயல்பாடு மூலம், எளிமையாக அறிந்துகொள்ளச் செய்யலாம். வகுப்பு மாணவர்களை கடிகார அமைப்பில் அமரச்செய்யவும். எண்கள், பெரிய முள், சிறிய முள்ளாக அவர்கள் இருப்பார்கள். பள்ளிக்கு காலையில் வந்ததில் இருந்து, நடைபெறும் செயல்களை எந்தெந்த நேரங்களில், எவ்வளவு கால இடைவெளியில் செய்கிறோம் என்பதை அறிந்துகொள்ள சார்ட்டில் எழுதிக்கொள்ளவும்.
கடிகார அமைப்பில் இருக்கும் மாணவர்களை அந்த நேரத்துக்குத் தகுந்தவாறு கடிகாரம் போல இயங்கவைக்கவும். உதாரணமாக... இறை வணக்கம் 9.20-க்கு துவங்கி 9.30-க்கு முடிவதை, முட்களாகப் படுத்திருக்கும் மாணவர்கள், நகர்ந்து இயங்க வேண்டும். நம் வாழ்க்கையில், திரும்பப் பெற முடியாதவற்றில் முக்கியமானது, நேரம். அதனால், நேரத்தின் முக்கியத்துவம் அறியும் வகையில், எளிய முறையில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கலாம். ஒவ்வொரு மாணவரையும் காலையில் எழுந்ததில் இருந்து எந்தெந்த நேரங்களில் என்னென்ன வேலைகளைச் செய்கிறார்கள் எனச் சொல்லவைக்கலாம். பயனற்ற விஷயங்களில் எவ்வளவு நேரம் கழிகிறது என்பதையும் அறிய வைக்கலாம். மாணவர்களின். . .
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdxAiBH7xKQrdqeCE6i0GPDzAedk0ea5QjBLZfD8R3O-8F07Cb8-cSozvbs7tqb1CEL-fgBg4mSt1hNYV7b0e7VT00Wm-oBY6zbt6oiUJO1jfh9cGBnSHDtIdN9JS0YokVkfFRiqTY9JE/s1600/ind_96889.jpg)
No comments:
Post a Comment